இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படத்தையும் தயாரித்தார் தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு.
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கொண்டாடப்பட்ட கர்ணன் திரைப்படத்தில் கதாபாத்திரங்களாக நடித்த நடிகர்கள் மட்டுமல்லாமல் பறவைகள் , விலங்குகள், சிறு பூச்சிகள், மரம், மலை, சிலை என அனைத்தும் கூட வசனங்கள் இல்லாமல் நடித்து மனதில் இடம் பிடித்தது.
அந்தவகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற குதிரை அனைவரது கவனத்தையும் பெற்றது. இந்த குதிரையின் மீது இறுதிகட்ட காட்சியில் தனுஷ் வரும்பொழுது திரையரங்குகள் அதிர்ந்தன. அலெக்ஸ் என பெயரிடப்பட்ட அந்தக் குதிரை திடீரென உயிரிழந்தது. இதுகுறித்து மிகவும் வருத்தம் அடைந்த இயக்குனர் மாரி செல்வராஜ் அந்த குதிரையோடு இருக்கும் புகைப்படத்தை அலெக்ஸ் என குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/mari_selvaraj/status/1434170825947549706