முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு ‘விருமன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இதில் நாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘மாநகரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.கே.செல்வகுமார் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் பூஜை இன்று (ஆக 06) நடைபெறுகிறது. வரும் 18-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கவுள்ளது. எதிர்பாராத விருந்தாளியாக பாலாவும் இதில் கலந்து கொண்டார்.
A very warm welcome to Aditi Shankar! You are going to win everyone’s heart! God bless!! உன் வரவு நல்வரவு ஆகுக!!@AditiShankarofl #Viruman #விருமன் @Karthi_Offl @dir_muthaiya @thisisysr @rajsekarpandian @2D_ENTPVTLTD @U1Records pic.twitter.com/fUvPzh42sw
— Suriya Sivakumar (@Suriya_offl) September 5, 2021