இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் ஹர்பஜன்சிங் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
Seantoaa Films மற்றும் Cinemass Studio இணைந்து தயாரிக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த லாஸ்லியா ஹர்பஜன் சிங் உடன் ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் நடிக்கிறார்.
இவர்களுடன் இணைந்து பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷும் நடித்துள்ளார். மேலும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் பிரண்ட்ஷிப் திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
#FriendshipMovie All set for grand theatrical release on September 17th.#FriendshipFromSep17th @harbhajan_singh @akarjunofficial #Losliya @actorsathish @JPRJOHN1 @shamsuryastepup @DMUdhayakumar @JSKfilmcorp @santhadop @LahariMusic @RIAZtheboss @CinemaassS @CtcMediaboy pic.twitter.com/b55XDpLM36
— CtcMediaboy (@CtcMediaboy) September 4, 2021