டில்லி
இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயல்வதாக ஆர் எஸ் எஸ் பத்திரிகையான பாஞ்சஜன்யா குற்றம் சாட்டி உள்ளது.
இந்திய வருமானவரித்துறைக்கு வரிகள் மற்றும் கணக்குகள் செலுத்த ஒரு புதிய போர்ட்டலை உருவாக்க இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் இடப்பட்டது. இந்த போர்ட்டல் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. சுமார் இரு மாதங்களுக்கு பிறகு இந்த போர்ட்டலில் பல குறைபாடுகள் இருந்ததால் இந்த தளம் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது இந்த தளம் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.
ஆர் எஸ் எஸ் க்கு சொந்தமான பாஞ்சஜன்யா என்னும் ஒரு வார இதழ் இது குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில் சமூக விரோதிகளின் உத்தரவின் பேரில் இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டி உள்ளது. இந்தக்கட்டுரையை சந்திர பிரகாஷ் என்பவர் எழுதி உள்ளார்.
இந்தியப் பொருளாதாரத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் வேண்டுமென்றே சீர்குலைக்க முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுப்பி உள்ள போதிலும் அதற்கான ஆதாரம் எதுவும் இந்த கட்டுரையில் குறிப்பிடவில்லை
அந்த கட்டுரையில் காணப்படுவதாவது.
“இன்ஃபோசிஸ் நிறுவனம் எப்போதும் முக்கியமான அரசு ஒப்பந்தங்களை குறைந்த தொகைக்கு எடுப்பது கேள்விக்கு இடம் அளிக்கிறது. இந்த போர்ட்டலில் காணப்படும் குறைபாடுகள் வரி செலுத்துவோரின் நம்பிக்கையை உடைத்து விட்டது. இந்த ஒப்பந்த ஒரு திறந்த புள்ளி மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் சில தேச விரோத சக்திகள் இன்ஃபோசிஸ் வழியாக இந்தியப் பொருளாதார நலன்களைத் தாக்க முயல்கிறதா எனக் கேள்வி எழுகிறது. ஆனால் எங்களிடம் இதற்கான உறுதியான ஆதாரம் இல்லை. அதே வேளையில் இந்நிறுவன வரலாற்றைப் பார்க்கும் போது இது நடந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இன்ஃபோசிஸ் மீது பலமுறை நக்சலைட்டுகள் இடதுசாரிகள் உள்ளிட்ட சிறு சிறு கும்பல்களுக்கு உதவியதாகப் பல முறை குற்றச் சாட்டு எழுந்துள்ளது. தவிர நாட்டில் பல சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இன்ஃபோசிஸ் நேரடி அல்லது மறைமுகமாக ஒத்துழைத்துள்ளது. இன்ஃபோசிஸ் அறக்கட்டளை சாதி வெறுப்பைத் தூண்டும் அமைப்புக்களுக்கு நிதி அளிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவன விளம்பரதாரர்கள் பல தேச விரோதமான மற்றும் அராஜகமான அமைப்புக்களுக்கு நிதி அளிக்கின்றன. இது குறித்து விசாரிக்க வேண்டாமா?
நாங்கள் இவ்வாறு சந்தேகிப்பதற்கு அரசியல் ஆதாயத்துக்காக எதிர் கட்சித்தலைவர்கள் மவுனமாக உள்ளே காரணம் ஆகும். தவிரக் காங்கிரஸ் உத்தரவின் பேரில் சில தனியார் நிறுவனங்கள் ஒரு ஒழுங்கற்ற தன்மையை உருவாக்க முயல்கிறதா என சந்தேகம் மக்கள் மத்தியில் உருவாகிறது.
இந்த நிறுவனத்தை நிறுவிய நாராயண மூர்த்தி தற்போதைய நிர்வாகத்துக்கு எதிராக உள்ளதை அறிவோம். நந்தன் நிலேகனி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டதையும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தற்போது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் கொண்டவர்கள் முக்கிய பதவியில் அமரித்தப்பட்ட்த்தையும் நினைவு கோர வேண்டும்
இப்படிப்பட்ட ஒரு நிறுவனம் இந்திய அரசிடம் இருந்து முக்கிய ஒப்பந்தங்களை எடுத்துக் கொண்டால் அதில் சீனா மற்றும் ஐஎஸ் ஐ தலையீட்டுக்குச் சாத்தியம் அதிகம் உண்டு. இந்த விவகாரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையிட்ட பிறகே போர்ட்டல் சரியாகப் பணி புரிகிறது. எனவே இந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கவும் எதிர்காலத்தில் கருப்பு பட்டியலில் சேர்க்கவும் வாய்ப்புள்ளது”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.