சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று அறநிலையத்துறை, சுற்றுலா, தொழிலாளர் நலத்துறை,கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று அறநிலையத்துறை, சுற்றுலா, தொழிலாளர் நலத்துறை, கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த துறைகளின்மீதான உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு, அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன், மா.மதிவேந்தன் ஆகியோர் பதிலுரை நிகழ்த்தி, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.