சென்னை:
பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் இன்று ஆடவர் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் கலந்துகொண்டார். ஹர்விந்தர் சிங் ஏற்கனவே நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இன்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில், தென் கொரியாவின் கிம் மின் சூவை வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வேளாண் குடும்பத்தில் பிறந்து, பல தடைகளைக் கடந்து, பாராலிம்பிக் பதக்கம் பெறும் முதல் இந்திய வில்வித்தை வீரராக உயர்ந்துள்ள ஹர்விந்தர் சிங் சாதிக்கத் துடிக்கும் இந்தியர்களின் சிறந்த அடையாளமாக விளங்குகிறார். வெண்கலப் பதக்கம் வென்றுள்ள அவருக்கு எனது பாராட்டுகள்; எதிர்காலத்திலும் அனைத்தும் வெற்றியாக எனது வாழ்த்துகள்! எனப் பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel