மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம் மேனன், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் பலரும் ஒன்றிணைந்து ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
முதலில் இந்தப் படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளதாக லிங்குசாமி அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிறுவனம், படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ், குறும்படங்கள் உள்ளிட்ட பல விஷயங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.