விஜய் ஆண்டனி நடிப்பில் , சசி இயக்கத்தில் மெகா வெற்றி பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன்.பிச்சைக்காரன் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. தமிழைவிட தெலுங்கில் படத்துக்கு அமோக வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனியே படத்தை தயாரித்து, இயக்கி, நடிக்கிறார். பிச்சைக்காரன் தெலுங்கில் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரிக்கின்றனர்.

விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாராகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் கதை திரைக்கதை எழுதி இயக்குவதோடு இசையும் அமைத்து நடிக்கிறார் விஜய் ஆண்டனி.இந்நிலையில் பிச்சைக்காரன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கப்பட்டுள்ளது