சென்னை

மிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி மற்ரும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில் அனைத்து கல்வி நிலையங்களும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டன.  ஒரு சில வகுப்புக்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன.   ஆனால் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக மீண்டும் அவை மூடப்பட்டன.  இணைய வகுப்புக்கள் மட்டுமே நடைபெற்று வந்தன.

தற்போது தமிழக அரசின் ஊரடங்கால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.  இதையொட்டி மால்கள், டாஸ்மாக், திரையரங்குகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன.  அவ்வரிசையில் இன்று முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அவசியம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   ஆயினும் நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பர்களை சந்திப்பதால் மாணவர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்