மிர்தசரஸ்

ஞ்சாபில் ஜாலியன்வாலா பாக் நினைவுச் சின்னம் மாற்றப்பட்டதால் சரித்திர அடையாளம் சிதைக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1919 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று பஞ்சாபில் ஜாலியன்வாலா பாக் பகுதியில் ஜெனரல் டயர் என்னும் ஆங்கிலேயனால் நூற்றுக் கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  பலர் உயிர் பிழைக்கச் சுவர்களில் ஏறிய போது சுடப்பட்டதால் சுவர்களில் தோட்டாக்களின் அடையாளம் இருந்தது.   அங்கிருந்த கிணற்றில் பலர் குதித்து உயிர் இழந்தனர்.

இந்த நினைவுச் சின்னம் புதுப்பிக்கப் பட்டு புதிய வடிவத்தில் மாற்றப்பட்டுள்ளது.    கடந்த ஒன்றரை வருட காலமாக நினைவிடம் முழுவதுமாக மூடப்பட்டு இந்த புதுப்பிக்கும் பணி நடந்தது.  தற்போது புதுப்பிக்கும் பணி முடிவடந்துள்ளது.    இந்த கட்டிடத்தைப்  பிரதமர் மோடி கடந்த 28 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.

இந்த இடத்தின் குறுகலான நுழைவு வாயில் அகற்றப்பட்டுப் பல சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.   இங்கு ஆயிரக்கணக்கானோர் குதித்து உயிர் இழந்த கிணறு ஒளி புகும் மூடியால் மூடப்பட்டுள்ளது.  ஒரு பெரிய தோட்டம் போல பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.   அதில் ஜாலியன்வாலா பாக் நிகழ்வு குறித்த ஒலி ஒளிக் காட்சி நடைபெறுகிறது.

 

இந்த மாற்றங்களுக்கு வரலாற்று ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ஜவகர்லால் நேரு பலகலையின் முன்னாள் பேராசிரியர் சமன் லால், “ஜாலியன்வாலா பாக் வளாகத்துக்கு வருவோர் இந்த நிகழ்வு குறித்து சோகத்துடன் செல்ல வேண்டும்.   அந்த அளவு கொடூர நிகழ்வு இங்கு நடந்துள்ளது.

ஆனால் தற்போது அழகிய தோட்டத்துடன் இது ஒரு பொழுது போக்கு தலம் ஆகி உள்ளது.   இது முதலில் அழகிய தோட்டமாக இருந்ததில்லை  இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதால் ஒரு சரித்திர அடையாளம் சிதைக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.  இதே கருத்தை மற்றொரு வரலாற்று ஆர்வலர் இர்ஃபான் ஹபிப் என்பவரும் தெரிவித்துள்ளார்.

அவர், “நினைவுச் சின்னத்தை மாற்றியது முழுக்க முழுக்க தவறானது.  சுவற்றை அழகுபடுத்தத் தேவை என்ன?  டயர் மூலம் ஏராளமான இந்தியர்கள் கொல்லப்பட்ட நிகழ்வை இந்த மாற்றங்கள் மறக்கச் செய்து விடும் போல் உள்ளன.  இதே கருத்தை மற்றொரு வரலாற்று ஆர்வலர் இர்ஃபான் ஹபிப் என்பவரும் தெரிவித்துள்ளார்.

அவர் “இந்த மாற்றம் மிகவும் தவறானது ஆகும்.  சுவற்றை ஏன் அழகு படுத்த வேண்டும். டயர் மூலம் பலர் கொல்லப்பட்ட்து தற்போது பலராலும் மறந்து விடும் நிலையில் உள்ளது.  இந்த வளாகத்தை அழகு  படுத்தியது வரலாற்று நிகழ்வை அடியோடு மாற்றி விட்டது.  ஏற்கனவே வரலாற்று நிகழ்வு  மாற்றி எழுதப்படுகையில் நினைவுச் சின்னமும் அடியோடு மாற்றப்ப்ட்டுள்ளது.  கிணற்றை மூடியது போன்ற மாறுதல்களும் தவறான நடவடிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.