டோக்கியோ:
பாராஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பவினாபென் பட்டேல், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங் உடன் மோதினார். இதில் 3-0 என்ற செட் கணக்க்கில் பவினாபென் பட்டேல் போராடி தோல்வியடைந்தார். இதன் மூலம் பவினாபென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
வெள்ளி பதக்கம் வென்ற இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.