சென்னை:
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அடுத்த வாரம் முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் அடுத்த வாரம் முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.