சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்துக்கு ‘இடிமுழக்கம்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
இதில் நாயகியாக காயத்ரி நடித்து வருகிறார். மேலும், செளந்தர் ராஜா, அருள்தாஸ், மனோபாலா உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்து வருகிறார்கள்.
பாடலாசிரியராக வைரமுத்து, இசையமைப்பாளராக ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
தற்போது இடிமுழக்கம் படத்தில் முன்னணி மலையாள நடிகர் வினீத் சீனிவாசன் இணைந்துள்ளார். இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இசையில் இடிமுழக்கம் படத்திற்கான அழகான பாடல் ஒன்றை நடிகர் வினீத் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார்.
இந்நிலையில் நேற்றுதான் படத்தை தொடங்கியது போல் இருந்தது. இதோ, இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டேன் என்று அறிவித்துள்ளார் சீனு ராமசாமி.
அத்துடன், “இடி முழக்கம் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆயத்தங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட படத்தின் ஒட்டு மொத்த காட்சிகளும் எடிட்டிங்கில் பார்த்த பிறகு, தம்பி ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கு நடிப்பிற்காக விருதுகளும் வாழ்த்துகளும் உண்டு” என ட்வீட் செய்துள்ளார்.
#இடிமுழக்கம்
முதற்கட்ட படப்பிடிப்பு
முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு ஆயத்தங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் எடிட்டிங்கில் பார்த்த பிறகு
தம்பி ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கு நடிப்பிற்காக விருதுகளும் வாழ்த்துகளும் உண்டு.
💐 💐@Kalaimagan20@CtcMediaboy— Seenu Ramasamy (@seenuramasamy) August 28, 2021