கிரைம் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள ‘சிட்டி’ திரைப்படத்தில் மலையாள இயக்குனரும், ஹீரோவான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்திய கால்பந்தாட்ட வீரர் ஐ.எம் விஜயன் போலீஸ் அதிகாரியாகவும், அக்க்ஷயா உதயகுமார், ஹரிதா ஹரிதாஸ் மற்றும் தனுஜா கார்த்திக் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை சூர்யா ஃபிலிம் புரொடக்சன் சார்பாக மகேஸ்வரன் நந்தகோபால் தயாரிக்கிறார்.

பயஸ் ராஜ் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்திற்கு ரமேஷ் நாராயண் இசை அமைக்கிறார். படத்தின் இசை வெளியீடு தற்போது கொச்சினில் நடைபெற்றது.