சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் ஆவணித்திருவிழா தொடங்குகிறது. ஆனால், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை யாக தமிழகஅரசு வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூட பக்தர்களுக்கு தடை விதித்துள்ளதால், பக்தர்கள் ஏமாற்றம் மற்றும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றனான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித்திருவிழா நாளை (27ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றனா ஆவணித்திருவிழா 2021 நாளை 27.8.2021 வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கிகுகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 31-ம் தேதி 5 ம் திருநாளான குடவருவாயல் தீபாராதனையும், செப்டம்பர் 02-ம் தேதி 7-ம் திருநாளன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 03-ம் தேதி 8-ம் திருநாள் பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி,ஞாயிறு அன்று கோவில்களின் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்திற்கும், அதிருப்தியும் அடைந்து உள்ளனர்.