தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருபவர் பிரகாஷ்ராஜ்.
1994 ஆம் ஆண்டு நடிகை லலிதகுமரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
பின்னர் பிரகாஷ் ராஜ், இந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை காதலிது கடந்த 2010 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் தங்களின் 11 ஆம் ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடினர். அப்போது தனது மகன் வேதாந்த் மற்றும் மகள்கள் முன்னிலையில், அவர்கள் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்துகொண்டனர். ’என் மகனுக்காக, நானும் போனி வர்மாவும் மீண்டும் திருமணம் செய்துகொண்டோம்’ என்று ட்விட்டரில் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
We got married again tonight..because our son #vedhant wanted to witness it 😍😍😍. Family moments #bliss pic.twitter.com/Vl29VlDQb4
— Prakash Raj (@prakashraaj) August 24, 2021