சிவகார்த்திகேயன் அயலான் . டாக்டர் படங்களை தொடர்ந்து டான் படம் உருவாகி வருகிறது.டான் படத்தினை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் உள்ளிட்டவற்றில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் சினிமாவின் லெஜண்டரி காமெடியன்களில் ஒருவரான கவுண்டமணியை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CS62GvBF481/