மியூசிக் ஆல்பங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் சினிமா பாடல்களை தாண்டி பிரபலமாக இருக்கும், அப்படி மியூசிக் ஆல்பங்கள் மூலம் பலரும் தங்கள் திறமையை நிரூபித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக மாறியுள்ளனர்.

சமீபத்தில் வெளியான குட்டி பட்டாஸ்,என்ஜாய் எஞ்சாமி,அஸ்கு மாறோ,ஹே சிங்காரி உள்ளிட்ட பல மியூசிக் ஆல்பங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்திருந்தன.

இந்த மியூசிக் வீடியோவில் தோன்றி பிரபலமான அபூர்வா இன்ஸ்டாக்ராமி மிகவும் பிரபலமான மாடல்களில் ஒருவர்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் அபூர்வா,தனக்கு விரைவில் அஜய் என்பவருடன் திருமணமாகவுள்ளதை அறிவித்தார். இவருக்கு பல ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தற்போது தனது வருங்கால கணவருடன் ரொமான்டிக் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CS7Cty1JHfp/