மும்பை: 
ந்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகச்  சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் என்ற இளம் கிரிக்கெட் வீரர் விளையாடுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சிங்கப்பூரைச் சேர்ந்த 25 வயதே ஆன டிம் டேவிட் என்ற இளம் வீரர் இந்த வருடம் நடக்க உள்ள மீதமுள்ள போட்டிகளில் எங்கள் அணிக்கு விளையாடுவார் என்றும்   ஃபின் ஆலன் என்ற நியூசிலாந்து வீரருக்குப் பதிலாக டிம் டேவிட் அணியில் இடம் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், இலங்கை வீரர்கள்,  வனிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோரும் ராயல்  சேலஞ்சர்ஸ் பெங்களூருவில் இணைந்துள்ளனர்.
படிகல், விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஹசரங்க, சுந்தர், ஜேமிசன், சிராஜ், சாஹால் எனச் சமீபத்தில் நன்றாக விளையாடி வரும் அனைத்து வீரர்களும் ஆர்சிபி அணியில் இருப்பதால் இந்த வருடம் கோப்பையை கைப்பற்றுவோம் என ஆர்சிபி அணி ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.