சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்துக்கு ‘இடிமுழக்கம்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

இதில் நாயகியாக காயத்ரி நடித்து வருகிறார். மேலும், செளந்தர் ராஜா, அருள்தாஸ், மனோபாலா உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்து வருகிறார்கள்.

பாடலாசிரியராக வைரமுத்து, இசையமைப்பாளராக ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இடிமுழக்கம் படத்தில் முன்னணி மலையாள நடிகர் வினீத் சீனிவாசன் இணைந்துள்ளார். இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இசையில் இடிமுழக்கம் படத்திற்கான அழகான பாடல் ஒன்றை நடிகர் வினீத் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார்.