ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி.

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

கடந்த மாத இறுதியில் வெளியான ‘எனிமி’ படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம்பெற்ற நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று (21.08.2021) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ‘பத்தல’ என தொடங்கும் இப்பாடல் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.