இந்தியாவில் மிகவும் பிரபலமான ‘ஆர்ச்சீஸ்’ காமிக்ஸின் ‘பெட்டி அண்ட் வெரோனிகா’ வெப் தொடராக உருவாகவுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கவுள்ள இத்தொடரை ஸோயா அக்தர் இயக்கவுள்ளார்.

இத்தொடரின் மூலம் நடிகர் ஷாரூக் கானின் மகள் சுஹானா கான் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் இருவரும் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளனர்.

இந்த வெப் சீரிஸ் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் சுஹானா, குஷி ஆகியோருடன் சைஃப் அலிகானின் மகன் இப்ராஹீமும் இத்தொடரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.