ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா சில ஆண்டுகளுக்கு முன் விசாகன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போது செளந்தர்யா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார்.
இதற்குமுன் அஸ்வின் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அஸ்வினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இவருக்கு வேத் என்ற மகன் இருக்கிறார்.
இந்நிலையில் செளந்தர்யாவும், அவரது கணவர் விசாகனும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட அவர்கள்கள், கோவில் யானை தெய்வானைக்கு பழங்கள் மற்றும் கரும்புகள் வழங்கி ஆசி பெற்றனர்.