டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36401 பேருக்கு கொரோனா பாதிப்பும், 530 பேர் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 36,401 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,23,22,258 ஆக அதிகரித்து உள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 1,223 அதிகம்.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 530 ஆக பதிவாகியுள்ளது. இதன்முலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,33,049 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 39,157 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் குணமடைந்தோர் மொத்தம் எண்ணிக்கை 3,15,25,080 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,64,129 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 56,64,88,433 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 56,36,336 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.