சென்னை

சென்னை முண்டகக் கண்ணி அம்மன் கோவிலில் பக்தர்களால் அம்மனுக்கு அளிக்கப்பட்ட சேலைகள் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு பக்தர்கள் புட்வை வாங்கி அளிப்பது வழக்கம்.  இந்த புடவைகள் அம்மனுக்கு ஒரு முறை அணிவிக்கப்பட்ட பிறகு அவற்றை கொவில் நிர்வாகம் பக்தர்கள் முன்னிலையில் ஏலம் விடுவது எப்போதும் நடைபெறும் ஒன்றாகும்.  அந்த புடவைகளைப் பல பக்தக்ரள் ஏலத்தில் எடுத்து அணிவது வழக்கமாகும்.

இந்த நடைமுறையின்படி, முண்டக கன்னியம்மன் கோவிலின் கோவில் நிர்வாகம் பக்தர்கள் மூலம் பெறப்படும் புடவைகளை ஏலம் விடுகிறது.  வருடா வருடம் இந்த ஏலம் மூலம் கோவில் ஒரு சிறிய வருவாயைப் பெறுகிறது,   ஆனால் இந்த ஆண்டு இந்த நடைமுறை கைவிடப்பட்டு, அந்த சேலைகள் அனைத்தும் கோவிலுக்கு அருகில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது.  ஏழை மக்கள் வரிசையில் நின்று வாங்கிச் சென்றுள்ளனர்.

 

இது குறித்து நெட்டிசன்கள் ”இது ஏழைகளுக்கு ஏற்ற சரியான சேவை.  ஏழைகளின் மேம்பாட்டுக்காவே அரசு, சமூகம் மற்றும் சமூகம் ஆகியவை  உள்ளன பொதுவாக. ஏலம் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் நடக்கும் ஒரு சாதாரண நடைமுறையாகும்  என்னும் போது அதை விடுத்து ஏழைகளுக்கு இலவசமாக அளித்தது பாராட்டுக்குரியதாகும்.” எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.