சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25,86,885 பேர் ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் இன்று 219 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு அரசு இன்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,86,885 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34,496 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில், தொற்றில் இருந்து 25,31,962 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 20,427 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று 219 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,09,71 பேர் ஆக அதிகரித்துள்ளது. இன்று 214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனதுடன், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 53,05,03 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. அங்கு 223 பேர் இன்று பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னையில் 219 பேர் பாதிக்கப்பட்டு 2வது இடத்தில் உள்ளது. சேலத்தில் 130 பேரும், செங்கல்பட்டில் 116 பேரும், தஞ்சாவூரில் 112 பேரும் இன்று புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:
அரியலூர் 15
செங்கல்பட்டு 116
சென்னை 219
கோயம்புத்தூர் 223
கடலூர் 67
தர்மபுரி 20
திண்டுக்கல் 11
ஈரோடு 185
கல்லக்குறிச்சி 30
காஞ்சிபுரம் 28
கன்னியாகுமரி 30
கரூர் 24
கிருஷ்ணகிரி 25
மதுரை 18
மயிலாடுதுறை 22
நாகப்பட்டினம் 30
நாமக்கல் 62
நீலகிரி 47
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 22
ராமநாதபுரம் 4
ராணிப்பேட்டை 23
சேலம் 130
சிவகங்கை 20
தென்காசி 5
தஞ்சாவூர் 112
தேனி 12
திருப்பத்தூர் 13
திருவள்ளூர் 72
திருவண்ணாமலை 41
திருவாரூர் 42
தூத்துக்குடி 6
திருநெல்வேலி 14
திருப்பூர் 94
திருச்சி 68
வேலூர் 27
விழுப்புரம் 31
விருதுநகர் 3