சென்னை:
தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன என்பது தெரிந்தது. மேலும் வகுப்புகள் தற்போது ஆன்லைனில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பள்ளிகள் திறக்கும் சூழல் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளை திறக்க தயார் நிலையில் இருக்கிறோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இன்று காலை பேட்டி அளித்தார்.
இந்த நிலையில் பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் திடீரென தமிழகம் முழுவதும் 37 முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.