சென்னை: தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த  டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி – தமிழக அரசு உயிரிழந்த 34 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க ரூ.8.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு உள்ளது.