சென்னை: நாமக்கல், கிருஷ்ணகிரி உள்பட 4 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது என  தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனால், அங்கிருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேரளாவில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு நடைபெறும் கொரோனா பரிசோதனை குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர். அண்டை மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வரும் பயணிகள் கட்டாயம் 72 மணிநேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட RT-PCR ஸ்கேன் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்  அவ்வாறு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு ரயில் நிலையத்தில் பரிசோதனை செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், மத்தியஅரசு தமிழகத்தில் மேலும்  4 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கி உள்ளதாகவும், அதன்படி,  கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் 600 மாணவர்களை கூடுதலாக சேர்க்க வாய்ப்பு உள்ளது என்றார்.

நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவ கல்லூரி: மத்தியஅமைச்சர் முன்னிலையில் எடப்பாடி அடிக்கல்