அம்மன் அவதாரத்தில் நடிகை ரேகா ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். வேப்பிலைக்காரி அவதாரத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பெரும்பாலானோர் இதை வெறும் ஃபோட்டோ ஷூட் என்று நினைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் . ஆனால் உண்மை அதுவல்ல . 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக இருந்த ரேகா, கமல், சத்யராஜ், ரஜினிகாந்த் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் நடித்தார். ஆனால் இதுவரை இதுபோன்ற அம்மன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியதில்லை .

அதனால் அந்த ஏக்கத்தினால் வேப்பிலைக்காரி உருவத்தில் தன்னை பார்க்க மிகுந்த கடவுள் பக்தியுடன் சிரத்தையுடன் இரண்டு நாட்கள் ஐந்து மணி நேரம் இதற்காக விரதம் இருந்து இந்த வேடத்தை பூண்டுள்ளார்.

அதில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், அம்மனை வழிபடுவதோடு, வீடுகளில் வேப்பிலையை பயன்படுத்தி, தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதில் சிறந்த இயற்கை மருத்துவ குணம் கொண்ட இலை வேப்பிலை எனத் தெரிவித்துள்ள அவர், கிருமிகளை மட்டுமல்லாது மனதில் இருக்கும் நெகடிவ் எண்ணங்களையும் போக்க வல்லது என கூறியுள்ளார்.

நடிகை ரேகாவின் ஃபோட்டோ ஷூட்டை திரைப்பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.

மேற்கொண்டு இந்த வேப்பிலைக்காரியை பின்தொடர ‘Rekha’s diary ❤️’ யூட்யூபையை ஃபாலோ பண்ணவும் . இந்த வேடத்தை தன் தனிப்பட்ட பிளாக்கிற்காக மட்டுமே செய்துள்ளார்.

https://youtu.be/Q3kmObk_H6k

இந்த காட்சியை நம் கண்முன் கொண்டு வந்து சேர்த்த மேக்கப் மேன் Harshadjee க்கு நம் நன்றியை காணிக்கையாக்கலாம்.