டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப்தக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு அரியானா மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளது. அதன்படி, சொந்த கிராமத்தில் மல்யுத்த மைதானம் அமைக்கப்படும் என்றும்,  ரூ.4 கோடி பரிசு மற்றும் அரசு வேலை உள்பட பல சலுகைகளை அறிவித்து உள்ளார். இதற்கு ரவிக்குமார் தாஹியா, மாநிலஅரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற ரவிக்குமாரின் சொந்த மாநிலம் அரியானா. அங்குள்ள சோனிபட் நகரத்தில் நஹ்ரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்  ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டு வெளிப்பதக்கம் வென்று, நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து, அவருக்கு பாராட்டுக்களும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.

ரவிக்குமார் தாஹியுவுக்கு, முதல்நிலை அரசு வேலை, பரிசுத்தொகையாக ரூ.4 கோடி ரூபாய் உடன் அரியான மாநிலத்தில்  எந்த இடத்தில் வேண்டுமானலும் 50 விழுக்காடு சலுகையில் நிலம் வாங்கிக்கொள்ளலாம் போன்ற பல சலுகைகளை அறிவித்து உள்ளதுடன்,  நஹ்ரி கிராமத்தில் மல்யுத்தத்திற்கான உள்அரங்க மைதானம் ஒன்று அமைக்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.

மாநில அரசு அளித்துள்ள சலுகைகளுக்கும், புதிய மைதானத்தின் கட்டுமான அறிவிப்புக்கும் ரவிக்குமார் தாஹியா, அம்மாநில முதல் மனோகர்லால் கத்தாருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.