கே.பாலச்சந்திரன் இயக்கத்தில் அழகன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. மணிரத்தினத்தின் “ரோஜா” படம் மூலம் மதுபாலா பல ரசிகர்களின் மனதை ஈர்த்தார்.
1999-ஆம் ஆண்டு மதுபாலாவுக்கு திருமணம் நடந்தது. இவர் நடிகை ஹேமமாலினியின் உறவினரான ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அமேயா, கீயா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை மதுபாலா தனது மகள்களோடு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.