டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் மூன்றாவது இடத்திற்காக இந்தியா – ஜெர்மனி இடையே கடும் போட்டி நிலவியது.
இன்று நடந்த இந்த போட்டியில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினர் 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.
1980 ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பதக்கம் வென்றிருப்பது ரசிகர்களை உற்ச்சாகப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 3 வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.