சென்னை: தமிழ்நாட்டில் இன்று , 1,986 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மாநில தலைநகர் சென்னையில் இன்று 204 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 25,59,597 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2,178 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,04,805 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,076 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து தற்போது 20,716 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் சென்னையில் 204 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது இதன்மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு – 5,38,152 ஆக அதிகரித்துள்ளது. இன்று 143 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 52,82,07 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக இன்று சென்னையில் எந்தவொரு மரணமும் நிகழவில்லை. இதுவரை 8318 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில், சென்னையில் 1627 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:
அரியலூர் 21
செங்கல்பட்டு 122
சென்னை 204
கோவை 246
கடலூர் 68
தர்மபுரி 29
திண்டுக்கல் 13
ஈரோடு 165
கள்ளக்ககுறிச்சி 52
காஞ்சிபுரம் 41
கன்னியாகுமரி 35
கரூர் 14
கிருஷ்ணகிரி 42
மதுரை 16
மயிலாடுதுறை 16
நாகப்பட்டினம் 39
நாமக்கல் 61
நீலகிரி 45
பெரம்பலூர் 9
புதுக்கோட்டை 23
ராமநாதபுரம் 9
ராணிப்பேட்டை 17
சேலம் 73
சிவகங்கை 22
தென்காசி 11
தஞ்சாவூர் 124
தேனி 11
திருப்பத்தூர் 17
திருவள்ளூர் 89
திருவண்ணாமலை 43
திருவாரூர் 53
தூத்துக்குடி 15
திருநெல்வேலி 23
திருப்பூர் 78
திருச்சி 70
வேலூர் 26
விழுப்புரம் 28
விருதுநகர் 16