மேஷம்
சேமிப்பும் உயரும். உங்களோட குடும்பத்தினரின் தேவைங்களை நிறைவேற்றிக் கொடுப்பீங்க. நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீங்க. தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். பொதுவாகவே சட்டென்று யாரையும் எதிர்த்துப் பேசாமல் இருந்தால் நல்லது. வெற்றி வெற்றி வெற்றி. தொழிலும் சிறக்கும் பணமும் பெருகும். பேச்சில் கவர்ச்சி கூடும். பயங்கர இக்கட்டான நிலையையெல்லாம் தாண்டி வந்தாச்சு. வெயிட் வெயிட். நல்ல நேரம் கூப்பிட்ட தொலைவில் இருக்கு. கவலை வேண்டாம். குழந்தைங்க மேடை மேல ஏறி பெருமிதமாய்ச் சுற்றிலும் பார்த்துவிட்டுப் பரிசுகள் வாங்குவாங்க. டாடிக்கு வெளிநாட்டு லாபங்களும் வருமானமும் வரும். அருமை தெரியாமல் யாரையும் எடுத்தெறிய வேண்டாம். அப்புறம் உண்மை தெரிஞ்சு ஃபீல் செய்வீங்க. பாராட்டு குவியும். தொழிலில் இத்தனை பெரிய முன்னேற்றம் நீங்க பார்த்து ரொம்ப நாளாகுது. கிரேட்.
ரிஷபம்
எதையுமே செய்து முடிக்க தீவிரமாக முயற்சித்தால், ஓரளவாவது பலன் கட்டாயம் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. உத்தியோகத்தில், சக ஊழியர்களின் பணியையும் சேர்த்து செய்யும் நிலை வரலாம். தொழில் செய்பவர்களுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சிரமமில்லாமல் பணிகள் நடைபெறும். வாகனம் வாங்கவீங்க. படிப்பில் ஜமாய்ப்பீங்க. கல்யாணம் ஆகுமா என்று ஏங்கிக் காத்திருந்தீங்க. இதோ… ரெடியா.. கடைகடையா ஏறி இறங்கி சேலையும் நகையும் வாங்கவே நேரம் சரியாப் போகும். பிசியாயிடுவீங்க. நண்பர்கள் நல்ல அட்வைஸர்களா இருப்பாங்க.. திடீர்னு எதிர்பார்க்காத இடங்களிலிருந்து இன்கம்… லாபம் வரும். வேலை பார்க்கும் இடத்தில் உங்க மதிப்பு கும்முன்னு உயரும். சில விஷயங்களை சஸ்பென்ஸாய் வைச்சிருந்து, வெற்றி பெற்றவுடன் சர்ப்பிரைஸாய் மற்றவர்களுக்கு அறிவிப்பீங்க. ஹாப்பி.
மிதுனம்
சந்தோஷமான… சுபமான.. மற்றும் தெய்வீகமான ஃபங்க்ஷன்ஸில் கலந்துக்குவீங்க. விருந்து பலமாய்த்தான் இருக்கும். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். உடன்பிறப்புகளின் திருமண வைபவங்கள் சிறப்பாக நடைபெறும். வழக்குகள் சாதகமாகும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீங்க. படிப்பை முடித்த உங்க பிள்ளைங்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். கூட்டுத் தொழில் புரிவோர் தனித்து இயங்க சந்தர்ப்பம் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், சுயதொழில் செய்வது பற்றி சிந்திப்பாங்க. லவ் என்னும் புதிய கிணற்றில் குதிப்பீங்க. சின்ன சின்ன ஆரோக்யப் பிரச்சினைகள் டென்ஷன் தரும். நீங்க டென்ஷன் ஆக வேண்டாம். தன்னம்பிக்கை கூடும். கணவருக்கு/ மனைவிக்கு நிறைய முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் நினைச்சே பார்க்க முடியாத மார்க்ஸ் வாங்குவீங்க. வெரி குட். கங்கிராட்ஸ்.
கடகம்
நீங்க இந்த வீக் நிறைய்ய்ய்ய்ய்ய முயற்சிகள் செய்து பாடுபடுவீங்க என்பதால், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு செயல்படுவீங்க. கணவன்- மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைங்களின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். ஒரு சில காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் காரியம் கைகூடிவிடும். பணிபுரியும் பெண்களுக்கு யோகமான வாரம் இது. அரசு வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடலாம். தொழில் செழிக்கும். குடும்பத்தில் உங்களைப் புரிஞ்சுக்காம இருந்தவங்கள்ளால் இப்ப வந்து வணங்கி வாழ்த்திக் கட்டிப்புடிச்சு லைக் செய்வாங்க. குழந்தைங்க கிட்ட கொஞ்சம் அனுசரிக்க வேண்டியிருக்கும். சரியாயிடுவாங்க. வெயிட் பண்ணுங்க. எதை எடுத்தாலும் ஸ்லோவாப் போகுதுன்னு மூக்கால் அழாதீங்க. தாமதமானாலும் மறுக்கப்படாது. சாப்பாட்டு விஷயங்களில் கவனமாய் இருந்துட்டீங்கன்னா ஆரோக்யம் சூப்பராய்த்தான் இருக்கும். டோன்ட் ஒர்ரிங்க.
சிம்மம்
நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீங்க. விலகிப்போன சொந்தங்கள் விரும்பி வந்து ஜாயின் செய்வாங்க. உங்க வீட்ல சுபச்சடங்குகள் அடுத்தடுத்து நடைபெற வழிபிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய முன்னேற்றம் கிடைக்கும். அரசின் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும் . சீக்கிரம் பேக் செய்யுங்க. பாஸ்போர்ட் ரெடியாத்தான் இருக்கும்.. விசாவுக்கு அப்ளை செய்விங்க. உடனே அதுவும் கிடைக்கும். கிளம்புங்க.. கிளம்புங்க.. கணவருக்கு/ மனைவிக்கு நிஜமாவே நல்ல செய்திகள் மெசேஜிலும் மெயிலிலும் வரும். கணவருடன்/ மனைவியுடன் இஷ்டத்துக்கு வாக்குவாதம் செய்ய வேண்டாம். அப்புறம் “சே இப்டி பேசிட்டேனே” என்று உங்களை நீங்களே குற்றம் சொல்லவும் வேண்டாம். இந்த வாரம் நீங்க தொட்டதெல்லாம் தங்கமாகும்.முயற்சியைக் கைவிடாதீங்கப்பா. நெவர்.
கன்னி
திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் திடீரென வருமானம் வந்து மகிழ்விக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும். கட்டிடப் பணி தொடரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் சுபமான கொண்டாட்டம் உங்களை ஜாலியாக்கும். எதில்தான் குறைச்சல்? என்ஜாய். கல்யாண மண்டம் சமையல்காரர் டெய்லர் என்று சந்தோஷத்துடன் அலையவே நேரம் சரியா இருக்கும். ஆமாங்க ஆமாம், வீட்டில் பல காலமாய்க் காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குறிப்பாய்க் கல்யாணத்திற்குக் காத்திருந்த குடும்ப நபருக்குக் கல்யாணம் ஆகும். அது நீங்களாகவும் இருக்கலாம். பேச்சில் கவனம்னா கவனம் அவ்ளோ கவனம் செலுத்தணும். உங்க பணிவாலும் செயல் திறமைகளாலும் மேலதிகாரியைக் கவர்ந்திழுப்பீங்க.. அனேகமா அவங்க ஒரு பெண் அதிகாரியா இருப்பாங்க. வாரத் துவக்கத்தில் பேச்சிலும் செயலிலும் ரொம்ப கேர்ஃபுல்லா இருங்கப்பா.
சந்திராஷ்டமம் : ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை
துலாம்
சகோதர சகோதரிங்க உங்களுக்கு நன்மை செய்வாங்க. எதிரிகள் பலம் குறையும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீங்க. உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் எளிதில் வந்து சேரும். வீடு, வாகனம் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அதுவும் கைகூடும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீங்க. குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் உண்டு. புதிய உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர், சுயதொழில் தொடங்குவதில் மும்முரம் காட்டுவர். மகன் .. மகள் பற்றி பயம் வேண்டாம். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட அவங்க எவ்ளோ சாஃப்ட் ஆயிட்டாங்கன்னு நினைச்சுப் பாருங்க. குழந்தைகள் வயிற்றில் பாதாம்கீர் வார்ப்பாங்க. வார மத்தியில பேச்சிலும் செயலிலும் ரொம்ப கேர்ஃபுல்லா இருங்கப்பா.
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 4 வரை
விருச்சிகம்
தனவரவு திருப்திகரமாக இருக்கும். வளைகாப்பு, சீமந்தம், திருமணம் போன்ற சுபநிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். பொதுவாழ்வில் இருப்பவர்கள், இழந்த பதவியை மீண்டும் பெறுவர். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கவனம் தேவை. ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் செயல்படுவீங்க. உங்கள் கருத்துக்களை உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். சென்ற வாரத்தில் நடைபெறாத நல்ல விஷயங்கள் இந்த வாரத்தில் துரிதமாக நடைபெறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வரலாம். மம்மி வெளிநாடு செல்வாங்க. அல்லது வெளிநாடு சம்பந்தமான இன்கம் வரும் அவங்களுக்கு. செலவைக் கட்டுப்படுத்துங்க.. முக்கியமான நல்ல சுப செலவுகள் வந்துக்கிட்டே இருக்கு கியூவில். அதுக்கு ரெடியாகற வழியைப் பாருங்க. வாரக் கடைசில ரொம்ப கேர்ஃபுல்லா இருங்கப்பா.
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 6 வரை
தனுசு
பிரதர்ஸ் மற்றும் சிஸ்டர்ஸ் மூலம் அனுகூலம் கிடைக்கும். பயணங்கள் பலன் தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு சுயதொழில் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். காரியங்களை கவனத்தோடு செய்து வெற்றி காண முற்படுவீங்க. உத்தியோகத்தில் சிலர், சக ஊழியர்களிடம் மனவேறுபாடுகளை அடைய நேரிடும். தொழிலில், அதிகமான வேலைப்பளு உண்டாகும். குறித்த நேரத்தில் பணியை முடிக்க முடியாது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமங்களைச் சந்திப்பீங்க. இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்து வழிபட்டு வரலாம். நிலம் வீடு ஏதாவது கட்டாயம் வாங்குவீங்க. குழந்தைங்க திடீர்னு புத்திசாலித்தனமா ஆயிடுவாங்க. மனசில் அப்பாடான்னு நிம்மதி வரும். ஓகே தானே? கிரேட் ரிலீஃப்.
மகரம்
நிறைய உழைப்பீங்க. அதுக்கேற்ற பாராட்டு இல்லைன்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. நேரடியாப் பாராட்டலைன்னாலும் உங்க பெயரை மேலிடம் கவனிச்சு உள்ளுக்குள்ள பாராட்டிக்கிட்டுதான் இருக்கு. குடும்பப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லதுங்க. ஆதாயம் இல்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும். எதிலும் நிதானம் தேவை. இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். திடீர் பயணத்தால் சில மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர் அதிக ஆதாயமுள்ள வேலைகளில் சேர முயற்சிப்பாங்க. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். தொழிலில் புதிய நபர்களின் வருகையால், பொருள் வரவு உண்டு. நிலுவைத் தொகை வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். பெண்கள் நவீனப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பாங்க. பட். செலவுங்களும் உங்க பேச்சும் ஓவரா ஆயிடாமல் ரொம்பவும் கேர்ஃபுலா இருந்துட்டீங்கன்னா .. நோ பிராப்ளம்.
கும்பம்
உத்தியோகத்தில் உள்ளவர்கள் முயற்சியின் மூலம் வரவேண்டிய கடன் தொகை கிடைக்கப்பெறுவர். தொழில் செய்பவர்களுக்கு அதில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் தம்பதி களின் ஒற்றுமை அதிகமாகும். வேலைக்குப் போகும் பெண்கள் சம்பள உயர்வு பெறுவர். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். கட்டிடம் கட்டிக் குடியேறுவது முதல் கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது வரை நீங்க நினைத்த செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். . தர்ம சிந்தனை அதிகரிக்கும். சூழ்ந்திருப்பதுபோல் சந்தோஷமும் லாபமும் ஒரு பக்கம் நிலவும். பிரச்சினையும் டென்ஷன்களும் இன்னொரு பக்கம் இருக்கும், எதையும் சமாளிக்கும் மனோதிடம் வரும். மென்டலி ஸ்டிராங்கா ஆயிடுவீங்க.
மீனம்
உங்க டாடிக்கு நன்மை வந்தால் அது உங்களால்தான். உங்க குழந்தைங்களைப் பற்றி எத்தனைக்கெத்தனை பயந்து நடுங்கினீங்களோ.. அவ்வளவுக்கவ்வளவு பெருமிதப்படுத்துவாங்க. குடும்பத்தில் ஒரு நல்ல விஷயமும் நடக்கமாட்டேங்குதே என்று சலித்துப் போயிருந்தீங்க. இனி வரிசையாய்ச் சுப நிகழ்ச்சிகள்தான். தொட்டதெல்லாம் துலங்கும். வாகனம் வாங்கப் போறீங்க. நல்லவங்களை நம்புங்க.. கெட்டவங்களை சந்தேகியுங்க. நீங்க அப்டியே ஆப்போசிட்டா இருக்கீங்களே. நீங்க ஹலோன்னு சொன்னாலும் “கிண்டலா” ன்னுவாங்க. எனவே கவனமாய்ப் பேசுங்க. எதிர்பாலின நட்பு சந்தோஷம் தரும். நன்மையும் தரும். ஆரோக்யத்தைக் கண் மாதிரி கவனிச்சுக்குங்க. கடுகு சைஸ் பிரச்சினைன்னாலும் கவனமாய் இருந்தால் பிரச்சினை வராது. கல்யாணத்துக்கு அவசரப்படாதீங்க. இன்னும் கொஞ்சம் காத்திருங்க. ப்ளீஸ் வெயிட்.