தஞ்சை:
விரைவில் அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்தார்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை அடுத்த கள்ளபெரம்பூர் செங்கழுநீர் ஏரியை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9வது முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பின்னர் தான் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும். அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும். அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர முயற்சிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.