பெங்களூரு

ர்நாடக மாநில புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரு வருடங்களாகக் கர்நாடக முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவி வகித்து வந்தார்.  அவர் நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாம செய்தார்.  அவரது ராஜினாமாவைக் கர்நாடக ஆளுநர் ஏற்றுக் கொண்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

அதையொட்டி இன்று பெங்களூருவில் கர்நாடக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

முன்னாள் கர்நாடக முதல்வ்ர் எஸ் ஆர் பொம்மையின் மகன் பசவராஜ் பொம்மை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

[youtube-feed feed=1]