
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கியது. அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் .
‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில், விக்ரம் படப்பிடிப்பில் கமலுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பகத் பாசில் வெளியிட்டுள்ளார். அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை இந்த செல்பி உறுதி செய்துள்ளது.
[youtube-feed feed=1]#Fafa meets @ikamalhaasan 💥💥
From #Vikram Sets pic.twitter.com/CXHNKFhXLd— Kamal Haasan Fans (@ikamalhaasanfan) July 24, 2021