சென்னை: தமிழகத்திற்கு இன்று வந்துள்ள 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும்பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தறபோது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாள்களாக தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்று மாலை புனேவின் சீரம் நிறுவனத்தில் இருந்து 3 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி வந்தடைந்தது. இந்த தடுப்பூசிகளை மாவட்ட நிலைகளுக்கேற்ப கணக்கீடு செய்து பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.