சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றது முதல், மாநில வளர்ச்சி பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. அவ்வப்போது துறைவாரியாக ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டு வருகிறார். இதனால், அரசு பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பொது, ஊழல் தடுப்பு ஆணையம், ஐ.டி, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச்செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கூடுதல் தலைமைச்செயலாளர், காவல்துறை இயக்குனர், மாநகர காவல்துறை ஆணையர் உள்பட உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர்.