டில்லி

பாஜகவின் மீது பயம் கொண்டுள்ள காங்கிரசாருக்குக் கட்சியை விட்டு வெளியேறும் கதவு திறந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே ஒரு சிலர் பாஜக மற்றும், ஆர் எஸ் எஸ் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  காங்கிரஸ் தலைமை முழு மூச்சுடன் பாஜகவின் பல ஆர் எஸ் எஸ் ஆதரவு நிலையைக் கடுமையாக விமர்சித்து வருகையில் அதை ஆதரிக்கவும் ஒரு சில காங்கிரசார் உள்ளனர்.

இவர்களுக்கு பாஜக மீது பயம் உள்ளதால் இவ்வாறு செயல்படுவதாக ஒரு கருத்து எழுந்துள்ளது.    இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், “பாஜக மீது பயம் கொண்டுள்ள காங்கிரசாருக்கு கட்சியை விட்டு வெளியேறும், கதவு திறந்துள்ளது.  காங்கிரஸ் அல்லாத வேறு சில கட்சியின் அச்சமின்றி உள்ளனர். அவர்களைக் காங்கிரஸுக்கு அழைத்து வர வேண்டும்.

காங்கிரஸில் யாருக்கு பாஜக மீது அச்சம் இருந்தாலும் அவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம்,   நமக்கு ஆர் எஸ் எஸ் கொள்கையை நம்புகிறவர்கள் தேவை இல்லை.  நமக்கு பாஜக மீது பயம் அற்றவர்கள் மட்டுமே தேவை” எனத் தெரிவித்துள்ளார்.