சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 2,458- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் 153 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை நேற்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் மேலும் 2,458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு 25 லட்சத்து 26 ஆயிரத்து 401- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,021 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 24,62,244 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 33,557 ஆக அதிகரித்தள்ளது.
மாநிலம் முழுவதும் 30,600 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் நேற்று 153- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 5,35,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில், கொரோனா தொற்றுடன் 30,600- பேர் சென்னையில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 5 பேர் உயிர் இழந்துள்ளனர்.. இதுவரை 8,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 164 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,25,687 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 1,629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
13.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 27,44,261 பேருக்கும், 13.07.2021 அன்று 20,632 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.