சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டெல்லி பயணமாகிறார். அங்கு மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுகிறார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று டெல்லி செல்கிறார். அவருடன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உள்பட அதிகாரிகள் செல்வதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால், முதல்வர் ஸ்டாலின் மாதம் ஒன்றுக்கு ஒருகோடி தடுப்பூசி தேவை என மத்தியஅரசுக்கு கடிதம் உள்ளார். அதையடுத்து, அமைச்சர் இன்று டெல்லி செல்கிறார்.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்திக்கும் மா.சுப்பிரமணியன், தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி மற்றும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி குறித்து விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறத.
ஏற்கனவே கடந்த வாரம் டெல்லி தயாராக இருந்த அமைச்சர் மா.சு, டெல்லியில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் காரணமாக, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பயணத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.