பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 1,913 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 1,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,74,597 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 48 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 35,944 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,489 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 28,04,396 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 34,234 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,547 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,26,988  பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை 13,042 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 3,041 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 18,87,236 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 26,710 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.