சென்னை: நெசவாளர்கள் வாழ்வு உயர அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணியுங்கள் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
செனனை தலைமை செயலகத்தில் இன்று கைத்தறித்துறையின் சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதல்வர், தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை உருவாக்க வேண்டும். பனை வெல்ல உற்பத்தியை அதிகரிக்க பொது பயன்பாட்டு மையங்கள் நிறுவிட வேண்டும் என்றார்.
மேலும், நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும் என்று கூறியவர், அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Patrikai.com official YouTube Channel



