சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை மாநகராட்சி பணிகளுக்கபக விடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த ஏப்ரல் 6ந்தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சி பறிகொடுத்தது. ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
திமுக ஆட்சி பதவி ஏற்றம், தமிழ்நாடு தலைமைச்செயலாளர், மாநகராட்சி ஆணையர் உள்பல அனைத்து துறையைச்சேர்ந்த அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட டெண்டர்கள் அனைத்தையும் ரத்து செய்து திமுக அரசு நடவடிக்கை எடுத்து ள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் அமைப்பு, சாலைப் பணிகள், மேம்பாலம், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.239 கோடி மதிப்பிலான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.
நேற்று தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அதையடுத்து, வேளச்சேரியில் 1400 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து, கடந்த அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் அறிவிப்பதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றம் சாட்டி, அதிமுக அறிவித்த டெண்டர்களை ரத்து செய்வதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.