பீஜிங்
பிரபல நடிகர் ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வசித்டு வருகிறார். சீன அரசு ஹாங்காங்கில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை அமலாகியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தற்போது 67 வயதாகும் ஜாக்கி சான் இந்த விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உள்ளார்.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 100 ஆண்டுகள் ஆவதால் அங்குப் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் ஒன்றாக திரைப்படத்துறையின் பிரபல நடிகர்களை வைத்து பீஜிங்கில் ஒரு கூட்டம் நடந்தது. இதில் கடந்த 2013 ஆம் ஆண்டு முடஹ்ல் சீன மக்கள் ஆலோசனை மாநாட்டில் உறுப்பினராக உள்ள ஜாக்கி சான் கலந்து கொண்டார்.
அவர் தனது உரையில், “சமிப காலமாக சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. நான் பல நாடுகளுக்குச் செல்லும் போது இதை நேரடியாக உணர்ந்துள்ளேன். நான் சீன குடிமகனாக உள்ளதில் பெருமை கொள்கிறேன். நம் சிவப்புக் கொடியில் உள்ள 5 நட்சத்திரங்களுக்கு உலகில் நல மரியாதை உள்ளது.
மிகக் குறுகிய காலத்திலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய ஆர்வமாக உள்ளேன் எனக்கு ஹாங்காங் மற்றும் சீனா ஆகிய இரண்டும் தாய்வீடு ஆகும். நான் எனது தாய் வீட்டை நேசிக்கிறேன். விரைவில் ஹாங்காங்கில் அமைதி திரும்பும்” எனத் தெரிவித்துள்ளார்.