இயக்குனர் பி.சேது ராஜனின் முதல் திரைப்படமாக ’என்டே பிரியதாமம்’ திரைப்படம் தயாராகி வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரான ’என்டே பிரியதாமம்’ பைனான்ஸ் பிரச்சனை காரணமாகவும் கொரோனா தொற்று லாஃடவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதாலும் ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த இயக்குனர் பி.சேதுராஜன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இவர் இயக்கிய ’என்டே பிரியதாமம்’ திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே சேதுராஜன் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் சேதுராமனின் மறைவுக்கு மலையாள திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.