சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 2,775 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சென்னையில் கொரொனா உயிரிழப்பின்றி,  171 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதியதா 2,775 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டதுடன், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 25,18,786  ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 47 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,418 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல நேற்று ஒரே நாளில்  கொரோனாவிலிருந்து 3,188 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 24,53,061 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா வார்டில் 32,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சென்னையில் 1,661 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று  171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,34,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனா 2வது அலை பரவியது முதல், நேற்றுதான் கொரோனா மரணம் ஏற்படாத நிலை சென்னையில் ஏற்பட்டு உள்ளது. இது சென்னை மக்களியே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா 2வது அலையின் தாக்கம், சென்னையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதுடன்,  தினமும் நூற்றுக்கணக்கிலானோரை கொன்று குவித்து வந்தது. ஆனால், மாநில அரசு எடுத்த தீவிரமான நடவடிக்கை காரரணமாக, படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில்,  சென்னையில் நேற்று மரணமில்லா நிலை உருவாகி உள்ளது.

நேற்று கொரோனா மரணமின்றி, சென்னையில் இதுவரை 8,256 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேவேளையில் நேற்று  223 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,25,127 பேர் குணம் அடைந்துள்ளனர்.

11.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 26,97,481 பேருக்கும், 11.07.2021 அன்று 19,543 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக விவரம்: