பெரியபாளையம்
பெரியபாளையம் அருகே ஒரு தனியார் நிகழ்வில் தமிழக ஆளுநர் ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு என கோஷம் எழுப்பி உள்ளார்.
சமீபத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாள் ஆளுநர் பன்வரிலால் புரோகித் உரையாற்றினார். உரையின் முடிவில் அவர் ஜெய்ஹிந்த் எனக் கூறாதது கடும் விவாதத்தை எழுப்பியது. ஆளும் திமுக மற்றும் பாஜகவினரிடையே இது கடும் வாக்குவாதங்களை எழுப்பியது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். இந்த மருத்துவமனையை ஒரு தனியார் அறக்கட்டளை அமைத்துள்ளது.
விழாவில் பேசிய ஆளுநர் மக்கள் கொரோனா தடுப்பு நெறிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவர் இறுதியில் ஜெய்ஹிந்த் மற்றும் ஜெய் தமிழ்நாடு என்னும் கோஷத்துடன் தனது உரையை முடித்தார். இதன் மூலம் முந்தைய சர்ச்சையை அவர் முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.